மேலும் செய்திகள்
பொருட்கள் குறித்த விழிப்புண
17-Nov-2024
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் பேரூராட்சியில், காஸ் அடுப்பு பழுது நீக்கம், இலவச சர்வீஸ் முகாம் மற்றும் எரிவாயு பயன்பாடு விழிப்புணர்வு ஏற்ப-டுத்தப்பட்டது.கடத்துார் தனியார் காஸ் ஏஜென்சி மற்றும் பேரூராட்சி இணைந்து, எரிவாயு பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் மணி தலைமையில் நடந்தது. இதில் அடுப்பை பயன்படுத்தும் விதம், காஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் காஸ் அடுப்புகளை குறைந்-தபட்சம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதால், கசிவு போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
17-Nov-2024