உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலையில் கூடிய ஆட்டுச்சந்தை ஜி.ஹெச்.,க்கு செல்வோர் அவதி

சாலையில் கூடிய ஆட்டுச்சந்தை ஜி.ஹெச்.,க்கு செல்வோர் அவதி

நல்லம்பள்ளி :தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில், வாரந்தோறும் செவ்வாய்கிழமையில் ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இச்சந்தைக்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் தங்களது ஆடுகளை வாங்கவும், விற்கவும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், ஆட்டுச்சந்தை நடக்கும் இடத்தில், கடந்த சில தினங்களுக்கு முன், 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, யாரும் உள்ளே நுழையாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதே சமயம் ஆட்டு சந்தைக்கு மாற்றிடம் ஏற்படுத்தவில்லை. வாகனங்களில் ஆடுகளை ஏற்றிவந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை நிறுத்த இடமில்லாத நிலையில், நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையில், ஆடுகளை நிறுத்தி விற்பனை செய்தனர். இதனால், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவதியடைந்தனர். மேலும், போதிய இடமில்லாத நிலையில், ஆட்டுச்சந்தை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பாரம்பரியமாக விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், நடந்து வந்த ஆட்டுச்சந்தைக்கு மாற்றிடத்தை ஏற்பாடு செய்து தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ