மேலும் செய்திகள்
தீபாவளியையொட்டி ஆடு விற்பனை ஜோர்
19-Oct-2025
நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமையன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை வாங்க, விற்க வந்திருந்தனர். நேற்று நடந்த ஆட்டு சந்தையில், 600க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் ஆடுகள், 5,000 ரூபாய் முதல், 20,000 ரூபாய் வரை மொத்தமாக, ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
19-Oct-2025