மின்சாரம் தாக்கி அரசு பஸ் டிரைவர் சாவு
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கட்டரசம்பட்டியை சேர்ந்தவர் செல்வம், 46. இவர், ஒசூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, 9:30 மணிக்கு செல்வம் தன் தோட்டத்து வீட்டின் அருகில் உள்ள தொட்டியில் மின்மோட்டார் மூலம், டிராக்டரை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அவரது சகோதரர்கள் முத்துமாறன், பழனி ஆகியோர் செல்வத்தை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே, செல்வம் இறந்து விட்டதாக கூறினர். கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.