மேலும் செய்திகள்
மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்
13-Sep-2024
அரூர்: 'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர வசதியாக, பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பாப்பநாயக்கன்வலசையில், 180க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தீர்த்தமலை அரசு மேல்-நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். பள்ளிக்கு சென்று வர பஸ் வசதியில்லை. இதனால், மாணவ, மாணவியர் தினமும், 10 கி.மீ., வரை நடந்தே செல்வதால் வீட்டிற்கு சென்றவுடன் சோர்வு ஏற்படுகிறது. அன்றாட பாடங்களைப் படிக்க முடிவதில்லை. எனவே, பள்ளி நேரத்தில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்-திருந்தனர். இது குறித்த செய்தி, படம், 'காலைக்கதிர்' நாளிதழில் கடந்த, ஆக., 30ல் வெளியானது. நேற்று முன்தினம் தர்மபுரியில் நடந்த அரசு விழாவில், அமைச்சர் பன்னீர்செல்வம், காலையில் அரூர் - சிலம்பை மற்றும் மாலையில் கோம்பை - அரூர் செல்லும் அரசு பஸ் இயக்கத்தை துவக்கி வைத்தார். நேற்று காலை, 7:45 மணிக்கு கோபாலபட்டிக்கு வந்த அரசு பஸ்சுக்கு அரூர், தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலை-மையில், மாவட்ட கவுன்சிலர் சரளா சண்முகம், பஞ்., தலைவர் ராமலிங்கம், பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் வர-வேற்பு அளித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து அந்த பஸ், 8:00 மணிக்கு, பாப்பநாயக்கன்வலசைக்கு சென்ற போது, அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமையில், கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று, இனிப்பு வழங்கினர். இதில், அரூர் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
13-Sep-2024