உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மழைக்கு இடிந்து விழுந்த அரசு கல்லுாரி சுற்று சுவர்

மழைக்கு இடிந்து விழுந்த அரசு கல்லுாரி சுற்று சுவர்

தர்மபுரி: தர்மபுரி, அதியமான்கோட்டை பஞ்., பகுதியில், தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இதில், 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்-தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை கனமழை பெய்தது. இக்கல்லுாரி முன்பிருந்த சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்-டதால், தண்ணீர் வெளியேறி சாலையில் பாய்ந்தது. அப்போது கல்லுாரி நுழைவாயில் அருகிலிருந்த கேட் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையறிந்த அதியமான் கோட்டை பஞ்., நிர்வாக ஊழியர்கள் சாக்கடை கால்வாயை அகலப்படுத்தியும், சரிந்து விழுந்த சுற்றுச்சு-வரையும் அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ