சரக அளவில் கால்பந்து அரசு பள்ளி முதலிடம்
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான கால்பந்து போட்டி வெங்கடசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. 50க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகள் பங்கேற்றன. சூப்பர் சீனியர் பிரிவில் போட்டியிட்ட பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று, சரக அளவில் முதலிடம் பிடித்தனர். மாவட்ட அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெகன்ஜீவன்ராம், ஜெகன் குட்டி மணி ஆகியோரை, தலைமை ஆசிரியர் கலைவாணன், உதவி தலைமை ஆசிரியர் ரகு மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.