சரக குழு விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டு போட்டி-களில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், அதி-காரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர், 14, 17, 19 வயது பிரிவில் கால்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, கபடி, கேரம், சதுரங்கம், தடகளம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்-றனர்.இவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மேலும் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டிக்கு, பிளஸ், 2 மாணவர் சந்தோஷ் அணி கேப்டனாகவும், திலீபன் உள்ளிட்ட, 10 பேர் கொண்ட குழு வரும், 17ல் சென்-னையில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து, இப் பள்ளி மாணவ, மாணவியர், 16 ஆண்டுகளாக மாவட்ட, மாநில அளவில் விளையாடி வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவியரை, பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல், பிரபு, அருணாவதி ஆகியோரை, தலைமை ஆசிரியர் செல்வம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பூவிழி, ஊராட்சி மன்ற தலைவர் யசோதா ஜெய-ராமன், முன்னாள் பி.டி.ஏ., தலைவர் அழகிரி, ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.