உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாகை வித்யாலயா மெட்ரிக் பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

வாகை வித்யாலயா மெட்ரிக் பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

அரூர்: அரூரில், - சேலம் சாலை எச்.புதுப்பட்டியிலுள்ள வாகை வித்யா-லயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யு.கே.ஜி., குழந்தை-களுக்கு 'பட்டமளிப்பு விழா' மற்றும் 'விருது வழங்கும் விழா' நடந்தது.பள்ளி செயலாளர் குழந்தைவேலு, இணைச்செயலாளர் வெங்க-டேசன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பெர்னார்ட்ஷா வரவேற்றார். பள்ளி தாளாளர் சங்கர் தலைமை வகித்து, பட்டம் பெற்ற அனைத்து குழந்தைகளையும் வாழ்த்தி பேசினார். தர்மபுரி மாவட்ட நீதிபதி ஸ்ரீதரன் பேசுகையில், ''தாமஸ் ஆல்வா எடிசன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோர் இளம்பருவத்தில் சரி-யாக படித்தவர்கள். எடிசனை அவரது தாய், வீட்டிலேயே கல்வி கற்பித்து, 1,000 அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்கச்-செய்து, வெற்றியாளராக வர உதவினார். பிள்ளைகளை வேறு யாருடனும் ஒப்பிட்டு பேசக்கூடாது. அவர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார். நிறைவாக, பட்டம் பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களும், சான்றிதழ்க-ளையும் வழங்கினார்.விழா ஏற்பாடுகளை, பள்ளி மேலாளர் சுகுமார் செய்திருந்தார். பள்ளி மூத்த தமிழ் ஆசிரியர் மாலிகான் நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை