உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குட்கா கடத்தியவர் சிக்கினார்

குட்கா கடத்தியவர் சிக்கினார்

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., முருகன் உட்பட போலீசார் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், கும்-பாரஹள்ளி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்-டனர். அப்போது, அவ்வழியாக வந்த, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட அசோக் லேலண்ட் தோஸ்த் சரக்கு வாக-னத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 131 கிலோ எடை கொண்ட, 2.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டி வந்த கர்நாடகா மாநிலம், காகேபுரா கிராமத்தை சேர்ந்த மகேஷா, 29, என்பவரை ‍போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !