மேலும் செய்திகள்
வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீப்பிடித்தது
20-Apr-2025
அரூர்:திருவண்ணாமலையில் இருந்து, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டிக்கு, நேற்று மதியம், 1:00 மணிக்கு வைக்கோல் ஏற்றிய ஈச்சர் வாகனம் வந்தது. கீழ்செங்கப்பாடியை சேர்ந்த மாதேஷ் என்பவர் ஈச்சர் வாகனத்தை ஓட்டினார். மோட்டூர் கிராம சாலையில் லாரி சென்றபோது, மேலே சென்ற மின்கம்பி மீது, வைக்கோல் உரசியதில் தீப்பற்றியது. அதிர்ச்சியடைந்த மாதேஷ் கீழே இறங்கி தீயை அணைக்க முயற்சித்தார். அதற்குள், மளமளவென தீ கொழுந்து விட்டு எரிந்தது. அரூர் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Apr-2025