தலைமை ஆசிரியர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
தர்மபுரி, பள்ளிகளில் அடிப்படை பணியாளர்களை நியமனம் செய்ய நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க, தர்மபுரி அவ்வையார் அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த ஆயத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு, நிர்வாகி பாபுசுந்தரம் தலைமையில் நடந்தது. மாநில சிறப்பு தலைவர் பொன்முடி பேசினார். இதில், மாநில பொதுக்குழுவில் எடுத்த முடிவின் படி, பள்ளிகளில் அடிப்படை பணியாளர்களை நியமனம் செய்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக., 13ல் தர்மபுரியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது என, தீர்மானம் நிறைவேற்றினர்.