மேலும் செய்திகள்
அரூரில் தொடர்மழை
10-Oct-2024
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்க-ளாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை, 3:45 முதல், காலை, 6:00 மணி வரை அரூரில் கனமழை பெய்தது. இதனால், அரூரில் நான்கு ரோடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட பகுதி சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவ-திக்கு உள்ளாகினர். நேற்று காலை நிலவரப்படி, அரூரில், 76.2 மி.மீ., மழை பதிவானது. தொடர்ந்து, நேற்று பகலிலும் அரூர் மற்றும் அச்சல்வாடி, மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டி உள்-ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
10-Oct-2024