உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல் பரிசல் துறை ரூ.1.91 கோடிக்கு ஏலம்

ஒகேனக்கல் பரிசல் துறை ரூ.1.91 கோடிக்கு ஏலம்

ஒகேனக்கல் :ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் வழக்கம்.இந்த ஆண்டுக்கான பரிசல் துறை ஏலம் நேற்று, பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.ஏலத்திற்கு பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் சத்திவேல், லோகநாதன் தலைமை வகித்தனர். இதில், 30 ஒப்பந்ததார்கள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி யுடன் ரூபாய், 1.73 கோடிக்கு போன நிலையில், இந்தாண்டு ஜி.எஸ்.டி.,யுடன் ரூபாய், 1.91 கோடிக்கு ஏலம் போனது.பென்னாகரம் அடுத்த பொச்சாரம்பட்டியை சேர்ந்த ஒப்பந்ததாரர் மாயக்கண்ணன் ஏலம் எடுத்தார். இதனால், கடந்த ஆண்டை விட தற்போது அரசுக்கு கூடுதலாக, 18 லட்சம் ரூபாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை