மேலும் செய்திகள்
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
30-Sep-2025
மகேந்திரமங்கலம், தர்மபுரி அருகே, காட்டுப்பன்றிக்கு கணவர் பாய்ச்சிய மின்சாரம் மனைவி உயிரை பறித்தது.தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலத்தை அடுத்த சின்னதப்பை கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பன். இவரது முதல் மனைவி சரசு, 45; தோட்டத்தில் எலி, காட்டுப்பன்றி தொல்லை உள்ளது. இதனால் இரவு நேரத்தில் தோட்டத்து வரப்பில் இரும்பு கம்பிகளை போட்டு அதன் மீது மின்சாரம் பாய்ச்சுவது வழக்கம், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், இப்படி செய்திருந்தார். நேற்று காலை தோட்டத்தின் அருகே மின்சாரம் தாக்கிய நிலையில் சரசு இறந்து கிடந்தார். அதிகாலையில் தோட்டத்துக்கு சென்றவர், மின்சாரம் பாய்ந்த கம்பியை மிதித்ததில் இறந்துள்ளார்.இதுகுறித்து ஜிட்டாண்டாஹள்ளி வி.ஏ.ஓ., கலைச்செல்வன் அளித்த புகார்படி, மகேந்திரமங்கலம் போலீசார் சரசு உடலை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜப்பனை கைது செய்த போலீசார், தர்மபுரி சிறையில் அடைத்தனர்.டவுன் பஞ்., கவுன்சிலரின் கணவர் - இ.ஓ., அடிப்படை வசதி தொடர்பாக வாக்குவாதம்கெங்கவல்லி, அக். 26அடிப்படை வசதி தொடர்பாக, தி.மு.க., கவுன்சிலரின் கணவரும், செயல் அலுவலரும் வாக்குவாதம் செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.சேலம் மாவட்டம் தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து, 18வது வார்டு மக்கள், டவுன் பஞ்., அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். இவர்களுடன் வார்டு தி.மு.க., கவுன்சிலரும், துணைத்தலைவருமான சந்தியாவின் கணவர் ரஞ்சித்குமார் உள்பட, 12 கவுன்சிலர்கள் வந்தனர்.'18வது வார்டில் மேல்நிலைத் தொட்டியை சரி செய்யாததால், தண்ணீர் வீணாகிறது. விரைவாக சீரமைக்க வேண்டும்' என்று செயல் அலுவலர் சோமசுந்தரத்திடம் கூறினர். அப்போது ரஞ்சித்குமார், 'பலமுறை அலுவலகத்தில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை' என்றார். செயல் அலுவலரோ, 'நேரில் பார்த்து விட்டு பணி மேற்கொள்ளப்படும்' என்றார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது ரஞ்சித்குமார், அலுவலக மேஜையை கையால் தட்டி பேசினார். பதிலுக்கு சோமசுந்தரமும் மேஜையை தட்டி, 'நீங்கள் கத்தினால், நானும் கத்துவேன். என்னிடம் இப்படி எல்லாம் கேட்கக்கூடாது' என்றார். மற்ற கவுன்சிலர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.இதுகுறித்து ரஞ்சித்குமார் கூறுகையில், ''நான் மேஜையை லேசாக தட்டியபோது, அவர் வேகமாக தட்டி, 'நானும் உங்களை விட அதிகம் கத்துவேன்' என்றார். உரிய பதில் அளிக்காமல் பேசுகிறார்,'' என்றார்.சோமசுந்தரம் கூறுகையில், ''வார்டு பிரச்னை, குடிநீர் சரிபார்ப்புக்கு, தீர்மானம் வைத்து பிறகே பணி மேற்கொள்ளப்படும். மரியாதை குறைவாக, தொந்தரவு அளிக்கும்படி பேசியதால், பதிலுக்கு மேஜையை தட்டினேன். ஒரு அதிகாரியாக என் பணியை செய்வேன். வேறு பிரச்னை இல்லை,'' என்றார்.
30-Sep-2025