உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தொடர் மழை-திரும்பாத தொழிலாளர்களால் பெரும்பள்ளம் ஓடை விரிவாக்கப் பணி சுணக்கம்

தொடர் மழை-திரும்பாத தொழிலாளர்களால் பெரும்பள்ளம் ஓடை விரிவாக்கப் பணி சுணக்கம்

தொடர் மழை-திரும்பாத தொழிலாளர்களால்பெரும்பள்ளம் ஓடை விரிவாக்கப் பணி சுணக்கம்ஈரோடு, நவ. 19-ஈரோடு மாநகரில் பழமையான பெரும்பள்ளம் ஓடை, திண்டலில் இருந்து காவிரி ஆறு வரை, 12 கி.மீ., மாநகரின் குறுக்கே ஓடுகிறது. கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர், மழை நீர் கலந்து காவிரி ஆற்றில் கலக்கிறது.ஓடையை சீரமைத்து மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மாநகராட்சி சார்பில், 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த, 2019ல் விரிவாக்கப் பணி தொடங்கியது. ஆறு பகுதிகளாக நடக்கும் பணியில், நான்கு கட்ட பணி மட்டுமே நிறைவு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநகர பகுதியில் பெய்து வரும் மழையால், பெரும்பள்ளம் ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், விரிவாக்கப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதில்லாமல் தீபாவளிக்கு சொந்த மாநிலங்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் இதுவரை திரும்பாததாலும், பணி பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை