உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் புளி வர்த்தக மையம் ஆலோசனை கூட்டத்தில் தகவல்

தர்மபுரியில் புளி வர்த்தக மையம் ஆலோசனை கூட்டத்தில் தகவல்

தர்மபுரி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை, ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார்.இதில், தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரியை தலைமையிடமாய் கொண்டு, ஒருங்கிணைத்த புளி வர்த்தக மையம் அமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதையேற்று, மாவட்ட புளி வணிக மையம் அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மஞ்சளுக்கு ஈரோடு என்பதை போல், தர்மபுரிக்கு புளி என, மிகப்பெரிய வர்த்தகத்தை உருவாக்க, புளி விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற, கலெக்டர் சதீஸ் தெரிவித்தார்.இதில், வேளாண் துணை இயக்குனர்(வணிகம்) இளங்கோவன், ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் அருள்மணி, தோட்டகலைத் துறை உதவி இயக்குனர் கங்கா, புளி வணிகம் மாவட்ட தலைவர் பச்சமுத்து பாஸ்கர், செயலாளர் வினோபாஜி, புளி உற்பத்தியாளர் சங்க தலைவர் சின்னசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை