உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின்வாரிய தொழிலாளர் பணி நிரந்தரத்திற்கு வலியுறுத்தல்

மின்வாரிய தொழிலாளர் பணி நிரந்தரத்திற்கு வலியுறுத்தல்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சத்யராஜ் தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச்செயலாளர் சரவணன் பேசியதாவது: கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., கொடுத்த, தேர்தல் வாக்குறுதிப்படி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி, எங்களுக்கு விடியலை தர வேண்டும். வாரியத்தில் உருவாக்கப்பட்ட கே.2 ஒப்பந்தத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தர வழங்க வேண்டும். வடசென்னை, எண்ணுார், மேட்டூர், துாத்துக்குடி அனல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். கேட்மேன் எழுத்து தேர்வில் தேர்வாகாத, 5,493 நபர்களுக்கு பணி ஆணை வழங்க, வாரிய முயற்சி செய்வதை கண்டிக்கிறோம். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கினால், கேங்மேன் சகோதரர்களுக்கும் பணி வழங்கலாம். மின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன்களுக்கு, அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய இடமாறுதல் வழங்க வேண்டும். பகுதி நேர ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி