உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆவணம் சரியாக இருந்தால் பட்டா வழங்க அறிவுறுத்தல்

ஆவணம் சரியாக இருந்தால் பட்டா வழங்க அறிவுறுத்தல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏ.ஜெட்டிஅள்ளியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் விற்பனை செய்யப்-பட்டு, கிரயம் பெற்றுள்ள உரிமையாளர்கள் பட்டா மாற்றம் செய்து கொள்ளாமல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பெயரி-லேயே இருந்து வந்தது. இந்நிலையில் வீட்டுமனைகள் கிரயம் பெற்றுள்ள உரிமையாளர்கள் தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், சிறப்பு முகாம் நேற்று நடந்தது.இதில், 200க்கும் மேற்பட்டோர் தங்களிடமுள்ள கிரய பத்திரம், வில்லங்க சான்று மற்றும் உரிய ஆவணங்களுடன் பட்டா மாறுதல் பெற மனு அளித்தனர். முகாமில் ஆய்வு மேற்-கொண்ட கலெக்டர் சதீஸ் ஆவணங்கள் சரியாக இருப்பின், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டா வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னையில், அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவுகளில் கலெக்டர் சதீஸ் ஆய்வு மேற்-கொண்டார். மேலும், உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரு-பவர்களிடம் அடிப்படை வசதிகள், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, மருத்துவக் கல்லுாரி முதல்வர் (பொ) டாக்டர் சிவக்-குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி