உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி நிறைவு

முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி நிறைவு

பாப்பிரெட்டிப்பட்டி; தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாண-வர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்பின் நிறைவு விழா, நேற்று முதல்வர் ரவி தலை-மையில் நடந்தது.தமிழ் துறை தலைவர் சித்திரை செல்வி, கணினி துறை தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் அருண் நேரு வரவேற்றார்.சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) ராஜ் பேசுகையில், ''கல்வி என்பது மிகப்பெரிய சொத்து. இது சமூ-கத்தில் மரியாதை, பொருளாதார வளர்ச்சி பெறு-வதற்கு காரணியாக விளங்குகிறது. சாதனை படைப்பதற்கு வறுமையோ தோல்வியோ தடை-யாக இருக்காது. ஆதலால், மாணவர்கள் சாத-னையாளர்களை உற்று நோக்கி வெற்றி அடைய வேண்டும். தற்கால மாணவ சமூகத்தின் மன-நிலை எவ்வாறு இருக்கிறது என்றால், புத்த-கத்தின் வழி அறிவதை விட காணொளி மூலமாக கற்பது சிறப்பு என்று நிலையில் உள்ளனர். இந்-நிலை மாறுவதற்கு தான் இந்த பயிற்சி வழங்கப்-பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி