இரும்பு தகடுகள்திருடியவர் கைது
இரும்பு தகடுகள்திருடியவர் கைது பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கவுண்டம்பட்டியில், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் மொபைல்போன் டவர் உள்ளது. இந்த டவர் இயங்காமல் போனதால், அரூர் இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் செந்தமிழ், 40, கடந்த, 1ல் ஆய்வு செய்தார். அப்போது டவர் அமைந்துள்ள அலுவலகத்தின் ஜன்னலை உடைத்து, இரும்பு தகடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. புகாரின்படி ஏ.பள்ளிப்பட்டி போலீசார், மூக்காரெட்டி பட்டியை சேர்ந்த சக்திவேல், 25. என்பவரை பிடித்து விசாரித்தனர் இதில் அவர் இரும்பு தகடுகளை திருடியது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.