உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

தர்மபுரி: தர்மபுரி அடுத்த பால ஜங்கமன அள்ளியை சேர்ந்தவர் ரவிக்குமார், 54, இவர், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் முதல்வர். இவர் மகன் அரவிந்த், சிவில் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார். இன்டர்வியூ செல்ல, நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, அரவிந்த் தன் குடும்பத்தினருடன் ஒரத்தநாடு சென்றுள்ளனர். நேற்று மதியம், 2:00 மணிக்கு, ரவிக்குமார் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த வளையல், செயின், மோதிரம், காசு உள்ளிட்ட, பத்தரை பவுன் நகைகள் மற்றும் ரொக்கம், 4 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி