உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கூத்தாண்டவர் கோவில் திருவிழா

கூத்தாண்டவர் கோவில் திருவிழா

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்ரோட்டில், 2 ஆண்டுகளுக்கு, ஒரு முறை, கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. காளிப்பேட்டை, பட்டுகோணாம்பட்டி, கோம்பூர் உட்பட, 18 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள், கூத்தாண்டவர் திருவிழாவை நடத்துகின்றனர். நேற்று முன்தினம், தேரில், சுவாமி சிலை நிலைநிறுத்தும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தலை இறக்குதல் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.மாலை, 4:45 மணிக்கு ஆட்டுக்கிடாய் பலியிடப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, அரவான் தலை வெட்டப்பட்டது. பின், சுவாமிக்கு பலியிடப்பட்ட ஆட்டுக்கிடாயின் ரத்தம், பொங்கல் வைத்த சாதம், வெல்லம் ஆகியவற்றை கலந்து, ரத்த சோறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை சாப்பிட்டால், குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், நோய் நொடிகள் தீரும் என நம்பப்படுகிறது. தொடர்ந்து அரவான் தலை இறக்குதல் நிகழ்ச்சியில், அரவானுக்கு சாத்திய சாமந்தி பூக்களை பூசாரிகள், மக்கள் மீது வீசினர். இதை மக்கள் பிடித்து, தங்களின் விவசாய நிலத்தில் போட்டால், விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். விழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை