மேலும் செய்திகள்
திருவண்ணாமலையில் நிலச்சரிவுக்கு காரணம் என்ன?
04-Dec-2024
அரூர், டிச. 15- தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, சித்தேரிமலை கடல் மட்டத்திலிருந்து, 3,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது.சித்தேரி மலை பஞ்.,ல், 62 கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையின் போது, சித்தேரி மலைப் பாதையின் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.அவை சீரமைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால் மீண்டும் அதே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டாவது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சித்தேரி மலைக்கு பஸ்கள் இயக்கப்படாததால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
04-Dec-2024