மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த தாளநத்தத்தில் மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழா கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது நேற்று முன்தினம் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும் அன்றிரவு வானவேடிக்கை, கரகாட்டத்துடன், மாரியம்மன் தேர் பவனி வந்தது. நேற்று அம்மனுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவிளக்கு ஊர்வலம் தாளநத்தம் கோவிலில் இருந்து புறப்பட்டு, புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே, காளியம்மன் கோவில் வரை சென்று திரும்பியது.இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.