நுாலக கட்டடம் திறப்பு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட அண்ணா நகரில், 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தமிழக அரசின் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், நுாலகம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அண்ணா நகரில் தனியார் பங்களிப்புடன், 20.70 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக அம்பேத்கர் நுாலக கட்டடம் கட்டப்பட்டது. இதை அரூர் ஆர்.டி.ஓ., ஹரிபிரியங்கா நேற்று திறந்து வைத்தார். இதில், அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.