உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்

மனைவியை கொன்றகணவருக்கு ஆயுள்தர்மபுரி, செப். 20- மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, தர்மபுரி மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, ஏரியூரை சேர்ந்தவர் பிரபு, 38. இவர் மனைவி நந்தினி, 30. பிரபுவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பால், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 2012- ல் ஜூன், 23- அன்று மனைவி நந்தினி மீது பிரபு, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில், படுகாயமடைந்த நந்தினி உயிரிழந்தார். ஏரியூர் போலீசார் பிரபுவை கைது செய்தனர்.இந்த வழக்கு, தர்மபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், பிரபுவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை