சாலையோரம் ஒற்றை யானை சுற்றுலா பயணிகள் அச்சம்
ஒகேனக்கல்: கோடை காலத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி கர்நாடகம் மற்றும் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள், ஒகேனக்கல் வனப்பகுதிக்கு ஆண்டுதோறும் வருவது வழக்கம். தற்போது வெப்பம் தகிக்கும் நிலையில், யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளன. நேற்று மதியம் சேந்துக்கிணறு அருகே, ஒற்றை யானை நீண்ட நேரமாக சாலையோரத்தில் சுற்றித்திரிந்தது. இதை அவ்வழியே வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். சிலர் பீதியடைந்து வாகனங்களை வேகமாக ஓட்டிச் சென்றனர். அங்கு வந்த வனத்துறையினர், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. கல்லை எடுத்து போடவோ, கூச்சலிடவோ, செல்பி எடுக்கவோ கூடாதென, சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.