மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
03-Aug-2025
தர்மபுரி: தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் புவனமாணிக்கம் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தர்ம-புரி அடுத்த, துாதரையான் கொட்டாய் பகுதி நெடுஞ்சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. டிரைவர் தப்பி சென்ற நிலையில் லாரியை பறிமுதல் செய்து புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Aug-2025