உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / லவ் டார்ச்சர் வக்கீல் கைது

லவ் டார்ச்சர் வக்கீல் கைது

தர்மபுரி: தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியைச் சேர்ந்தவர் 24 வயது பட்டதாரி பெண். இவருடன் 10ம் வகுப்பில் படித்தவர், பென்னாகரத்தை சேர்ந்த மோகன் சந்தோஷ்துரை, 25; வக்கீல்.இவர் 2024ல், இன்ஸ்ட்ராகிராமில் பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். பெங்களூரு சென்ற மோகன் சந்தோஷ்துரை, பெண்ணுடன் பழகி, காதலிப்பதாக கூறியுள்ளார்.மோகன் சந்தோஷ்துரைக்கு ஏற்கனவே திருமணமானதும், அவர் மீது கஞ்சா வழக்கு இருப்பதையும் அறிந்த பெண், அவருடன் பேசுவதை தவிர்த்தார். ஆத்திரமடைந்த மோகன் சந்தோஷ்துரை, அவருக்கு மிரட்டல் விடுத்தார். பெண் புகார்படி, மோகன் சந்தோஷ் துரையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி