மேலும் செய்திகள்
ரூ.39 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
10-Oct-2024
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரில் நேற்று நடந்த வெற்றிலை சந்தையில், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர். இங்கு மணியம்பாடி, கோம்பை, முத்தனுார், அய்யம்பட்டி, வேப்பிலைப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை-வித்த வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட, ஒரு மூட்டை வெற்-றிலை ஆரம்ப விலை, 10,000 ரூபாய் முதல், 13,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று ஆரம்ப விலை, 8,000 ரூபாய் முதல், அதிகபட்சமாக, 16,000 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட மூட்டைக்கு, 3,000 ரூபாய் விலை அதிக-ரித்தது. அதன்படி நேற்று, 4 லட்சத்துக்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
10-Oct-2024