உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட்டில், மா.கம்யூ., கட்சி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மாதாந்திர மின்-கணக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை, மாநில அரசே உற்பத்தி செய்யும் வகையில், புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஏழுமலை, கோவிந்தன் நேரு, பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.* பென்னாகரம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி குழு செயலாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன், மாவட்ட குழு உறுப்பினர் ஜீவானந்தம், அன்பு, குமார், சிவா உள்ளிட்டோர் பேசினர்.* பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன், மா.கம்யூ., பாப்-பிரெட்டிப்பட்டி வட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மூத்த நிர்வாகி தீர்த்தகிரி தலைமையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ