உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மா.கம்யூ., மாவட்ட செயற்குழு

மா.கம்யூ., மாவட்ட செயற்குழு

ஒகேனக்கல், ஒகேனக்கல்லில், மா.கம்யூ., கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் பேசினார். கூட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தின் தொடர் வறட்சிக்கு முடிவு கட்ட, மழைக்காலங்களில் காவிரியில் உபரியாக ஓடும் நீரை மாவட்டம் முழுவதும் உள்ள, 600 க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரப்பி, நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திட்டத்தை உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ