உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்கம்

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்கம்

பென்னாகரம் :பென்னாகரம் அடுத்த, சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்க விழா நடந்தது.தலைமை ஆசிரியர் பழனி தலைமை வகித்தார். மாணவர்களின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்ட வழிகாட்டி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவினருக்குமான கொடிகள் முறையே சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், வெள்ளை கொடி அறிமுகப்படுத்தப்பட்டு, குழு தலைவரிடம் வழங்கி பதவியேற்பு விழா நடைபெற்றது.மாணவர்களிடையே கற்றல் திறனை மேம்பாடு அடைய செய்வது, மாணவர்களிடையே குழு மனப்பான்மையை வளர்ப்பது, அனைவருக்குமான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவது, நேர்மறை நடத்தைகளை வலுவூட்டுதல், தலைமைத்துவ பண்பை வளர்த்தல், ஆசிரியர் மாணவர் உறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு குழுக்கள் செயல்பட இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ