உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைநாடு மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைநாடு மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஜன. 4-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் மாநில துணை செயலாளர் பெருமாள் தலைமையில் நடந்தது.இக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், பள்ளி, கல்லுாரி மற்றும் ஐ.டி.ஐ., என, மொத்தம், 372 விடுதிகள் உள்ளன. இவற்றில், பெற்றோர் சங்கத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். மேலும், இந்த விடுதி மாணவர்களுக்கு அரசு வழங்கும் உணவுத் தொகையை முறையாக செலவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஒருங்கிணைப்பாளர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் அய்யாதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ