உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டிராக்டரில் மண் கடத்தியவர் கைது

டிராக்டரில் மண் கடத்தியவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த தாளநத்தம் வி.ஏ.ஓ., குமார், 45. இவருக்கு நேற்று முன்தினம் அய்யம்பட்டி பகுதியில் மண் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது தா.அய்யம்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவரது விவசாய நிலத்தில், அப்பகுதியை சேர்ந்த பழனி, 55, டிராக்டரில் மண் அள்ளி கடத்தினார். அதை வி.ஏ.ஓ., குமார் மடக்கி பிடித்தார். புகாரின் படி கடத்துார் போலீசார் மண் அள்ளி டிராக்டரில் கடத்திய பழனியை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி