உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தொழிலாளியை கத்தியால் காயப்படுத்தியவர் கைது

தொழிலாளியை கத்தியால் காயப்படுத்தியவர் கைது

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பச்சினாம்பட்டியை சேர்ந்-தவர் வினித், 27, கூலித்தொழிலாளி; இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தன் நண்பர்கள் ராபின், சுதர்சன் ஆகியோ-ருடன், மது அருந்தி விட்டு, வீடு திரும்ப அரூர் நான்குரோடு பாரதி நகர் அருகே நடந்து சென்றார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த நெருப்பாண்டகுப்பத்தை சேர்ந்த வெங்கடேசன், 20, என்பவர், தகாத வார்த்-தையால் திட்டி, வினித்தை தாக்கியுள்ளார். தட்டிக்‍கேட்ட வினித்தை, வெங்கடேசனின் நண்பரான, அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சித்திரைசெல்வன், 25, என்பவர், வினித்தின் தாடையை கத்தியால் கிழித்து ரத்தக்காயம் ஏற்படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகார் படி, அரூர் போலீசார், சித்திரை-செல்வனை கைது செய்தனர். தலைமறைவான வெங்கடேசனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி