உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விலை சரிவு எதிரொலியால் மீனுக்கு வீசப்படும் மாம்பழம்

விலை சரிவு எதிரொலியால் மீனுக்கு வீசப்படும் மாம்பழம்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஹள்ளி, பெரியாம்பட்டி, ஜிட்டாண்டஹள்ளி, மகேந்திரமங்கலம், வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நடப்பு பருவத்தில், 15,000 ஏக்கரில் செந்துாரா, பெங்களூரா, பங்கனபள்ளி உட்பட, 12 வகையான மா வகைகள் விளைந்து, அறுவடைக்கு தயாராக உள்ளன.எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகரித்த நிலையில், உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மாங்காய்களை அறுவடை செய்யாமல் உள்ளனர்.கிலோ, 3 ரூபாய் என்ற விலைக்கு, வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், மா விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.இந்நிலை நீடித்தால், இரு வாரங்களில் மொத்த மாங்காய்களும் மரத்தில் பழுத்து, அழுகும் நிலை ஏற்பட்டு விடும். விலை சரிவால் அறுவடை செய்தவற்றை விற்பனைக்கு கொண்டு செல்லாமல், சில விவசாயிகள் சாலையோரம் கொட்டி வருகின்றனர்.இந்நிலையில், தர்மபுரி அடுத்த அன்னசாகரம் ஏரியில், மீன் குத்தகைக்கு ஏலம் எடுத்தவர்கள், குறைந்த விலையில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கி, ஏரி மீன்களுக்கு உணவாக வீசி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை