உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முதுநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு

முதுநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு

தர்மபுரி: தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்ட-தாரி ஆசிரியர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட அமைப்பின் சார்பாக, தர்மபுரி மாவட்ட நல திட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இணை இயக்-குனர் சுகன்யாவிடம், ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேற்று முன்-தினம் வழங்கப்பட்டது.ஜாக்டோ ஜியோ சார்பில் அக்., 4 அன்று நடந்த தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு, தமிழக அரசின் எந்தவித உத்தரவுமின்றி சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. இதில், தேர்வு நிலை, சிறப்பு நிலை தள்ளி போகிறது. அந்த நாட்களை முறைப்படுத்தி ஊதியம் பெற்று தர வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, 2020க்கு முன், முடித்தவர்களுக்கு இன்னும் பெற்று வழங்-கப்படவில்லை. அதை பெற்று வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு ஒப்ப-டைப்பு ஆகியவற்றை நிறைவேற்றித்தர வேண்டும். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்களின் எம்.பில்., ஊக்க ஊதிய உயர்வை தணிக்கை தடை செய்துள்ளனர். அதை நிவர்த்தி செய்ய வேண்டும், என்ற கோரிக்கைகளை வலி-யுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை