மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாட்டம்
18-Jan-2025
இண்டூர்: தர்மபுரி மாவட்டம், இண்டூரில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், இண்டூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில், அ.தி.மு.க., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர் நடிகை ரஜினி நிவேதா, மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன் உட்பட பலர் பேசினர். இதில், கட்சியின் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய துணை செயலாளர் சக்தி நன்றி கூறினார்.
18-Jan-2025