மோடி பிறந்த நாள் விழா மரக்கன்றுகள் வழங்கல்
அரூர் :பிரதமர் நரேந்திர மோடியின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு, அரூரில் நகர, பா.ஜ., சார்பில், மரக்கன்றுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நடந்த விழாவிற்கு, நகர தலைவர் ரூபன் தலைமை வகித்தார். விழாவில் பொதுமக்களுக்கு வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் பிரவின், சாமிக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.