உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அவ்வை காலனியை சேர்ந்தவர் மாதேஷ், 28. இவர் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி நந்தினி, 28. தம்பதிக்கு நித்திஷ், 8, சகித்திரன், 7 என, 2 மகன்கள் உள்ளனர். கடந்த, 23ல் குழந்தைகளுடன் நந்தினி மாயமானார். மாதேஷ் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.* தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்த, ஒன்னியம்பாடியை சேர்ந்த, 17 வயது மாணவி, தர்மபுரியிலுள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 25 அன்று மாயமானார். பெற்றோர் புகார் படி, கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ