உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மனு அளிக்க வந்த பெண்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள்

மனு அளிக்க வந்த பெண்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள்

அரூர் அரூரில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க கோரி, கலெக்டரிடம் மனு அளிக்க திரண்ட பெண்களை, அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த, 20ல் ஜமாபந்தி துவங்கியது. கலெக்டர் சதீஸ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கலெக்டர் சதீஸ், அரூர் தாலுகா அலுவலகம் வந்தார். இந்நிலையில் மதியம், 12:30 மணிக்கு எச்.தொட்டம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட நாச்சினாம்பட்டி, பச்சினாம்பட்டியை சேர்ந்த பெண்கள், தொட்டம்பட்டி மற்றும் மோப்பிரிப்பட்டி பஞ்சாயத்துகளை, அரூர் நகராட்சியுடன் இணைத்ததால், தங்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.எனவே, அரூர் நகராட்சியுடன் தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி பஞ்சாயத்துகளை இணைத்ததை ரத்து செய்து, 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும் எனக் கோரி, கலெக்டர் சதீஸிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது, தாலுகா அலுவலக நுழைவாயிலில் இருந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், பெண்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்களிடம், 100 நாள் வேலை திட்டப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். உங்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானப்படுத்தினர்.இதையடுத்து, மனு அளிக்க வந்த பெண்கள் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ