உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஏரிகளில் விடப்பட்ட ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்

ஏரிகளில் விடப்பட்ட ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில், 1.06 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தமிழக அரசு, உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் மீன் குஞ்சுகளை வளர்க்க அரசு உத்தரவிட்டது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில், 200 ஹெக்டேர் பரப்பளவில், அரசு கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் மீன் குஞ்சுகள் வளர்க்க, இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடத்துார் அய்யன் ஏரி, நல்லகுட்லஹள்ளி ஏரி, தென்கரைகோட்டை ஏரி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஓந்தியாம்பட்டி ஏரி, அதிகாரப்பட்டி மிட்டாதாரர் ஏரிகளில் மொத்தம், 1.06 லட்சம் மீன் குஞ்சுகள் மீன் வளத்துறை மூலம் விடப்பட்டன.நிகழ்ச்சியில், கடத்துார் பி.டி.ஓ.,க்கள் சுருளிநாதன், மார்க்ரெட், மீன் வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ