மேலும் செய்திகள்
சட்ட விழிப்புணர்வு முகாம்
30-Oct-2024
பென்னாகரம், நவ. 24-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கல்லாவி வனப்பகுதியில் மான் வேட்டையாடி, அதன் இறைச்சியை தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில், விற்பனை செய்வதாக மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. ஊத்தங்கரை அருகே வெள்ளி மலையை சேர்ந்த செல்லப்பன், 40, என்பவர் மான் இறைச்சி விற்பனைக்காக பென்னா கரம் பகுதிக்கு கொண்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரை பென்னாகரம் வனத்துறையினர் கைது செய்து, 4 கிலோ மான் இறைச்சி, இரண்டு மானின் தோல்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு, 2017ம் ஆண்டு பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், செல்லப்பனுக்கு, ஒரு மாத சிறை தண்டனை மற்றும் 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
30-Oct-2024