உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, இலக்கியம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் கட்டடம் கட்ட சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தார். இதில், பணிகள் முடிக்கப்பட்டு நேற்று அங்கன்வாடி கட்டிடத்தை குழந்தைகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்க்க வேண்டுமென, எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !