உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நெல் கொள்முதல் நிலையம் அரூர், நரிப்பள்ளியில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் அரூர், நரிப்பள்ளியில் திறப்பு

அரூர்:தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் விடுத்துள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு, 2025 - 26 சம்பா பருவத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள், வரும் ஆகஸ்ட் மாதம் வரை திறந்து செயல்படுத்த வந்த அரசு உத்தரவின் படி, விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை நேரடியாக கொள்முதல் செய்ய, தமிழ்-நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம், 2 இடங்களில் இன்று முதல், நெல் கொள்முதல் செய்யப்படும். அதன்படி, அரூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், நரிப்பள்ளியில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கட்டடத்-திலும் நெல் கொள்முதல் செய்யப்படும். சன்ன ரகம் ஒரு குவிண்டால், 2,545 ரூபாய்க்கும், பொது ரகம் குவிண்டால், 2,500 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும். நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெல்லிற்கு அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்-கத்தொகையை பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !