உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கலால் ஆபீஸ் முன் திரண்ட பனை தொழிலாளர்கள்

கலால் ஆபீஸ் முன் திரண்ட பனை தொழிலாளர்கள்

தர்மபுரி, பென்னாகரம் பகுதிகளில் பனைமரத்தில் இருந்து கள் இறக்கியதாக, 5 பேரை தர்மபுரி மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் நேற்று விசாரணைக்கு அழைத்து வந்தனர். அதையடுத்து, நேற்று மதியம், 3:00 மணிக்கு வெண்ணாம்பட்டியில் உள்ள தர்மபுரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலவலகம் முன், 50க்கும் மேற்பட்ட பனை தொழிலாளர்கள் திரண்டனர். பனை மர விவசாயிகள் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, விசாரணைக்கு அழைத்து வந்த, 5 பேரையும் போலீசார் விடுவித்தனர்.சேலம் மண்டல தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கூறுகையில், ''பென்னாகரத்தில், 5 பேரை, கள் இறக்கியதாக போலீசார் பிடித்து வந்தனர். மேலும், கள் இறக்க தடை செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர். இதை தமிழகம் முழுவதும் அனைவரும் அறியும் வகையில், அறப்போராட்டமாக செய்து வருகிறோம். மத்திய அரசு உணவு பட்டியலில் வைத்திருந்தும், மாநில அரசு போதைபொருள் என்கிறது. கள் மீதான தடையை நீக்கும் வரை, தமிழகம் முழுவதும் பனைமரம் ஏறுபவர்களை ஒருங்கிணைத்து போராடுவோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ