உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாட்டப்பன் கோவில் முப்பூஜை விழா

பாட்டப்பன் கோவில் முப்பூஜை விழா

அரூர் அரூர் அடுத்த ஈட்டியம்பட்டியிலுள்ள பாட்டப்பன் கோவில், முதலாமாண்டு முப்பூஜை விழா, கடந்த, 20ல் கொடியேற்றுதல், கங்கணம் கட்டுதலுடன் துவங்கியது. 21ல் பாட்டப்பன் மற்றும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. 22ல் பொங்கல் வைத்தல் மற்றும் கூழ் ஊற்றுதலும், 23ல் தேர் ஊர்வலம் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. 24ல் தாரை, தப்பட்டை, பம்பை மற்றும் வாணவேடிக்கையுடன் முப்பூஜை நடந்தது. அன்றிரவு, அர்ஜூனன் தபசு தெருக்கூத்து நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை