ரூ.1.30 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை
பாலக்கோடு, பாலக்கோடு தீர்த்தகிரி நகரில், 1.30 கோடி ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்க, தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட தீர்த்தகிரி நகர், ரேஷன் கடை தெரு, ஜிம்மா மஜித் தெரு, சையத்பீர் தெரு, சையத்திலாவார் தெரு, பாபு சாயுபு தெரு, இந்திரா நகர், அப்துல்லா நகர், எம்.ஜி., சாலை குறுக்குதெரு, தீர்த்தகிரி நகர் குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க, சிறப்பு நிதி மூலம், 1.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை, தீர்த்தகிரி நகரில், பாலக்கோடு பேரூராட்சி சேர்மன் முரளி தலைமையில் நேற்று நடந்தது. இதில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் உட்பட, தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.